டெல்லி விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் மு.க ஸ்டாலின் சந்திப்பு

டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

Update: 2023-04-28 07:33 GMT

புதுடெல்லி,

டெல்லியில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள 'கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை' திறப்பு விழாவிற்கு அழைப்பு விடுத்தார். இதற்காக டெல்லி சென்று இருந்த முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், ஜனாதிபதியை சந்தித்த பிறகு, டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்