பள்ளி சென்று வீடு திரும்பிய மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் - கொடூர சம்பவம்
9ம் வகுப்பு மாணவி பள்ளி சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் ரொஹடா கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அருகில் உள்ள கிராமத்தில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை தினமும் அவரது சகோதரர் பைக்கில் ஏற்றிக்கொண்டு பள்ளியில் விடுவார். மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவார்.
இந்நிலையில், நேற்று மாலை மாணவியை அவரது சகோதரர் அழைக்க பள்ளிக்கு வரவில்லை. இதனால், மாணவி நடந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை அதே பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்கள் இருவர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். பின்னர் அந்த மாணவியை அருகில் உள்ள தோட்டத்திற்கு கடத்தி சென்ற மாணவர்கள் இருவரும் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு தோட்டத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். கிராம மக்கள் வருவதை அறித்த மாணவர்கள் இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையின் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.