மைனர் பெண் கர்ப்பம்
எலந்தூர் தாலுகாவில் மைனர் பெண்ணை கர்ப்பமாக்கியது யார் என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொள்ளேகால்:-
மைனர் பெண் கர்ப்பம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் எலந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஒரு பண்ணை தோட்டத்தில் வடமாநில தம்பதி தங்களது 5 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்கள். இதில் அவர்களது 16 வயது மூத்த மகளுக்கு நேற்று முன்தினம் திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அதிகப்படியான காய்ச்சலால் அவதிப்பட்ட அந்த மைனர் பெண்ணை, அந்த தம்பதி எலந்தூர் டவுனில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அந்த மைனர் பெண்ணை டாக்டர்கள் பரிசோதித்த போது அவள் கர்ப்பிணியாக இருப்பதும், 4 மாத கர்ப்பிணியாக தற்போது இருந்து வருவதும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மைனர் பெண்ணின் பெற்றோர் இதுபற்றி அவளிடம் விசாரித்தனர்.
போலீஸ் விசாரணை
ஆனால் அவளுக்கு அதிகப்படியான காய்ச்சல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவளிடம், அவளது பெற்றோரால் விசாரிக்க முடியாமல் போனது. இதையடுத்து அவர்கள் இதுபற்றி எலந்தூர் டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த மைனர் பெண்ணின் உடல்நிலை மோசமாக இருப்பதால் அவளிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் தயங்கி வருகிறார்கள். அந்த மைனர் பெண்ணை கர்ப்பமாக்கியது யார்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.