சித்தராமையாவை ஒருமையில் திட்டிய மந்திரி ஸ்ரீராமுலு

முட்டாள் என்று கூறியதால் ஆவேசம் சித்தராமையாவை ஒருமையில் திட்டிய மந்திரி ஸ்ரீராமுலுவின் பேச்சையால் சர்ச்சை எழுந்துள்ளது.

Update: 2022-10-16 18:45 GMT

பெங்களூரு:

போக்குவரத்துத்துறை மந்திரி ஸ்ரீராமுலு பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் ஒரு முட்டாள் என்று சித்தராமையா கூறியுள்ளார். அவர் வக்கீல் தொழிலை எப்படி செய்தார் என்பதை நான் பார்த்துள்ளேன். அவர் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே வக்கீல் தொழில் செய்துள்ளார். அவர் ஒரு ராட்சசர். அதனால் தான் சாமுண்டீஸ்வரி தொகுதியில் அவரை மக்கள் தோற்கடித்து முகத்தில் கரியை பூசி அனுப்பினர். தேவேகவுடா முதுகில் குத்தியவர். காங்கிரஸ் கட்சியை 2 ஆக பிரித்துள்ளார். டி.கே.சிவக்குமாரை சித்தராமையா மிரட்டியுள்ளார். அதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நேரம் வரும்போது அதை நான் பகிரங்கப்படுத்துவேன். குடகில் தனது கார் மீது முட்டை வீச ஏற்பாடு செய்தவரும் அவரே. பல்லாரியில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தை கவனித்தேன். அது ஒரு சர்க்கஸ் போல் இருந்தது. சித்தராயைாவை வீட்டுக்கு அனுப்பும் கடைசி தேர்தல் வருகிற சட்டசபை தேர்தல் தான். இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.அவர் தன்னை முட்டாள் என்று கூறியதால் ஆவேசம் அடைந்து, பேட்டி முழுவதிலும் சித்தராமையாவை ஒருமையில் திட்டி தீர்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்