லடாக்கில் ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம்

நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர்.

Update: 2023-12-02 10:09 GMT

லே,

லடாக்கில் இன்று காலை 8.25 மணிக்கு ரிக்டர் 3.4 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்து தங்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.


Tags:    

மேலும் செய்திகள்