ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் 3.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் பகுதியில் நேற்று இரவு 11.06 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம், தரைமட்டத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.