ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது: மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது என்று முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-24 12:24 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலானது என்று முன்னாள் முதல் மந்திரியும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

மெகபூபா முப்தி கூறியிருப்பதாவது:- "ஜம்மு காஷ்மீர் பிரச்சினை சிக்கலான ஒன்று. இங்கு தினமும் என்கவுண்டர்கள் நடைபெறுகிறது. சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளை சரிசெய்வது முக்கியமானதுதான். அதற்கு பாகிஸ்தான் பிரதமர் முதலில் இந்தியா- பாகிஸ்தான் உறவை மேம்படுத்த வேண்டும். பின்னர் ஜம்மு காஷ்மீர் பிரச்சினையை சரிசெய்யலாம்" என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்