மேகதாது விவகாரம் : கர்நாடக அரசின் சுற்றுச்சூழல் அனுமதி விண்ணப்பம் நீக்கம்
மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது
கர்நாடக அரசு, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடியில் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வருகிறது. இந்த விவகாரம் குறித்த சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பம் செய்திருந்தது.இந்த நிலையில் மேகதாது அணை கட்டுவதற்கான சுற்றுச்சுழல் அனுமதி விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. கர்நாடக அரசின் விண்ணப்பத்தை பரிசீலனையில் இருந்து மத்திய சுற்றுச்சுழல் துறை நீக்கியுள்ளது.