ஷாங்காய் அமைப்பு நாடுகளின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது

ஷாங்காய் அமைப்பு நாடுகளின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகள் கூட்டம் டெல்லியில் தொடங்கியது.

Update: 2023-03-10 21:18 GMT

புதுடெல்லி,

இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளைக் கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இந்த அமைப்பு நாடுகளின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகளின் 3 நாள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் இந்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், கொரோனா பெருந்தொற்றுதான், நீதித்துறை அதிநவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்ற வைத்தது என குறிப்பிட்டார்.

கொரோனா காலத்தில் காணொலிக்காட்சி வழியாக இந்தியாவில் உள்ள மாவட்ட கோர்ட்டுகள் 1 கோடியே 65 லட்சம் வழக்குகளையும், ஐகோர்ட்டுகள் 75 லட்சம் வழக்குகளையும், சுப்ரீம் கோர்ட்டு 3.79 லட்சம் வழக்குகளையும் விசாரித்ததாக அவர் தெரிவித்தார்.

ஸ்மார்ட் கோர்ட்டுகள், நீதித்துறையின் எதிர்காலம், நீதி அணுகலுக்கான வசதிகளை ஏற்படுத்துதல், நிறுவன ரீதியில் நீதித்துறை சந்திக்கும் சவால்கள் என பல்வேறு முக்கிய விஷயங்கள் இந்த கூட்டத்தில் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்