"மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும்" - மம்தா பானர்ஜி

மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு வழங்காவிட்டால் ஜி.எஸ்.டி. செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Update: 2022-11-15 13:30 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜார்கிராம் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், மாநிலத்தின் நிலுவைத் தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை என்றால், சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) செலுத்துவதை நிறுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார். மேலும் மத்திய அரசு மாநிலங்களின் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டும் அல்லது ஆட்சியில் இருந்து விலக வேண்டும் என்று அவர் கூறினார்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டம் (MGNREGA) வாயிலாக மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை வெளியிடவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், இது தொடர்பாக பழங்குடியினரை களத்தில் இறங்கி போராட அழைப்பு விடுத்தார்.

நம்முடைய நிதி நிலுவைத் தொகையைப் பெற மத்திய அரசிடம் மன்றாட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, நிலுவைத் தொகையை வழங்காவிட்டால் பா.ஜ.க. அரசு ஆட்சியிலிருந்து விலக வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்