பைக் மீது டிராக்டர் மோதியதில் மராத்தி தொலைக்காட்சி நடிகை உயிரிழப்பு

பைக் மீது கான்கிரீட் கலவை டிராக்டர் மோதியதில் மராத்தி தொலைக்காட்சி நடிகை உயிரிழந்தார்.

Update: 2022-11-13 12:42 GMT

image courtesy: krsweet333 instagram

கோலாப்பூர்,

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கான்கிரீட் கலவை டிராக்டர் மோதியதில் மராத்தி தொலைக்காட்சி நடிகை உயிரிழந்தார்.

'துஜ்ஹத் ஜீவ் ரங்களா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தவர் கல்யாணி குராலே ஜாதவ் (வயது 32). இவர் நேற்று மாலை வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, சாங்லி-கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே அவரது மோட்டார் சைக்கிள் மீது கான்கிரீட் கலவை டிராக்டர் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து கல்யாணி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. டிராக்டர் ஓட்டுநருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கோலாப்பூர் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்