மராட்டியம்: பழைய பொருள் கடையில் சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி

ஒரே குடும்ப உறுப்பினர்களான 2 பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

Update: 2023-11-25 06:59 GMT

மும்பை,

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் மும்ப்ரா பகுதியில், கோத்பந்தர் சாலையில் அமைந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் பழைய பொருட்களுக்கான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில், சிலிண்டர் ஒன்று திடீரென இன்று வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில், ஒரே குடும்ப உறுப்பினர்களான 2 பேர் படுகாயமடைந்து உயிரிழந்தனர். மற்ற 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்