டெல்லியில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் வருமான வரி சோதனை

டெல்லியில் ‘மேன்கைன்ட்’ மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் டெல்லி வளாகங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

Update: 2023-05-11 21:17 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'மேன்கைன்ட்' மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் டெல்லி வளாகங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த சோதனை மேலும் 2 நாட்கள் தொடரலாம் என கூறப்படுகிறது. இந்த நிறுவனம் சமீபத்தில்தான் பொது நிறுவனமாக அறிமுகமாகி பங்குச்சந்தையில் நுழைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்