மணிப்பூர் கலவரம் - 22 துப்பாக்கிகள் பறிமுதல்
மணிப்பூரில் பாதுகாப்பு படைகளின் நான்காவது நாள் தேடுதல் வேட்டையில், 22 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மணிப்பூர்,
அண்மையில் மணிப்பூரில் நிகழ்ந்த கலவரத்தை தொடர்ந்து, அம்மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனையடுத்து மணிப்பூரில் அமைதியை மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக நாட்டின் பாதுகாப்பு படைகள் இணைந்து, மணிப்பூரின் பதற்றமாக பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நான்காவது நாளாக நடைபெற்ற தேடுதல் வேட்டையில், 22 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.