மணிப்பூர் சம்பவத்தில் மேலும் 14 பேர் அடையாளம் தெரிந்தது - கைது செய்ய போலீஸ் தீவிரம்
மணிப்பூர் சம்பவத்தில் மேலும் 14 பேர் அடையாளம் தெரிந்தது. அவர்களை கைது செய்ய போலீஸ் தீவிரம் காட்டி வருகிறது.
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் கங்க்போக்பி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் கடந்த மே 4-ந் தேதி, 2 பெண்கள் நிர்வாணப்படுத்தி, ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக இன்று ஒருவர் உள்பட இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவ வீடியோவை வைத்து மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்தனர்.