கர்நாடகா: திருமணம் செய்ய மறுத்ததால் 17 வயது பெண் மீது ஆசிட் வீச்சு
கர்நாடகாவில் திருமணம் செய்ய மறுத்ததால் 17 வயது பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் காதலை ஏற்க மறுத்ததால் 17 வயது பெண் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநகராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபர், அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். அவர் அதை ஏற்க மறுக்கவே அந்த பெண்ணை யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதற்காக அந்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசியுள்ளார்.
அந்த பெண்ணின் முகம் மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண், உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கனகபுரா டவுன் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.