காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் விட்டுச்சென்ற காதலன் - நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ

மத்தியப் பிரதேசத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் விட்டுச்சென்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-25 05:26 GMT

ரேவா,

மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் காதலியை தாக்கி சாலையில் மயக்க நிலையில் சுயநினைவின்றி விட்டுச்சென்ற காதலனையும் அவனது கூட்டாளியையும் போலீசார் கைது செய்தனர். மவுகஞ்ச் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 21-ந்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த பெண்ணை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்த வீடியோவில் அந்த நபர் பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கி கீழே தள்ளி காலால் உதைக்கும் கொடூர காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பலமாக தாக்கப்பட்ட அந்த பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை அப்படியே சாலையில் விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

நீண்ட நேரமாக அந்த பெண் அங்கு மயங்கி கிடந்துள்ளார். இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த கிராம மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கொடூரமாக தாக்கிய அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 151-ன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்