பொதுக்கழிவறையை பயன்படுத்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர் அடித்துக்கொலை

பஸ் நிலையத்தில் உள்ள பொதுக்கழிவறையை பயன்படுத்திவிட்டு பணம் கொடுக்காமல் சென்ற நபர் அடித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

Update: 2022-12-16 05:55 GMT

Image Courtesy ; AFP

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் தாதர் பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. அங்கு பொதுக்கழிவறை ஒன்று உள்ளது. இதை விஷ்வஜித் என்பவர் பராமரித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அந்த கழிவறையை நேற்று இரவு ராகுல் பவார் என்ற நபர் பயன்படுத்தியுள்ளார். பின்னர், அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

அப்போது, அங்கிருந்த விஷ்வஜித் கழிவறையை பயன்படுத்தியதற்கு பணம் தரும்படி கேட்டுள்ளார். அப்போது, பணம் கொடுக்க மறுத்த ராகுல் பவன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ராகுல் பவன் தான் வைத்திருந்த கத்தியை கொண்டு விஷ்வஜித்தை தாக்க முற்பட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விஷ்வஜித் அருகில் இருந்த மரக்கட்டையை கொண்டு ராகுலை தாக்கியுள்ளார்.

இதில் ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஷ்வஜித்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்