மேற்கு வங்காளத்தில் மாடு கடத்தியதாக சந்தேகம் - லாரிக்கு தீவைப்பு

மேற்கு வங்காளத்தில் மாடு கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் லாரிக்கு தீ வைக்கப்பட்டது.

Update: 2022-10-23 22:50 GMT

Image Courtesy: ANI

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள பகுரியாவில் நேற்று சிலர் ஒரு காளை மாட்டை லாரியில் ஏற்ற முயன்றனர்.

அவர்கள் மாடு கடத்தல்காரர்கள், மாட்டை திருடிச்செல்ல முயல்கிறார்கள் என நினைத்து உள்ளூர்க்காரர்கள் அங்கு திரண்டனர். இதனால் மாட்டை லாரியில் ஏற்ற முயன்றவர்கள் அவர்களுக்கு பயந்து தப்பி ஓடினர்.

ஒருவர் மட்டும் உள்ளூர் கும்பலிடம் சிக்கிக் கொள்ள, அவரை சரமாரியாய் அடித்து உதைத்தவர்கள், லாரிக்கு தீவைத்தனர்.

இந்நிலையில் அந்த நபரை மீட்ட போலீசார், அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். வன்முறையில் ஈடுபட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலரை போலீசார் தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்