ஒடிசா: மகளை பாலியல் வன்கொடுமை செய்த நபரை அடித்துக்கொன்ற தந்தை

சிறுமியின் தந்தையும், மாமாவும் சேர்ந்து அந்த நபரை அடித்துக்கொன்றனர்.

Update: 2023-07-31 02:30 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலம் கந்த்கமல் மாவட்டம் ராய்ஹை பகுதியில் உள்ள கிராமத்தில் நேற்று மாலை கட்டிட வேலைகள் நடைபெற்று வந்தன. இதில் கான்கிரீட் கலவை எந்திர ஆபரேட்டராக 35 வயது நபர் வேலை செய்து வந்தார்.

இதனிடையே, அந்த நபர் வேலை நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் மாமா பாலியல் வன்கொடுமை செய்த நபரை உருட்டு கட்டையால் கடுமையாக தாக்கினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

இதன் பின் இருவரும் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   

Tags:    

மேலும் செய்திகள்