எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு வழக்கு: தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் முடித்துவைப்பு

எஸ்.பி.வேலுமணி மீதான முறைகேடு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டு தனி நீதிபதி விசாரிக்க கோரிய தமிழக அரசின் மனு சுப்ரீம் கோர்ட்டில் முடித்துவைக்கப்பட்டது.

Update: 2022-09-14 21:50 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு விசாரித்து வருகிறது. ஆனால் இந்த மனுவை தனி நீதிபதியே விசாரிக்க கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி அஜஸ் ரஸ்தோகி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

அப்போது எஸ்.பி.வேலுமணி சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியும், தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபலும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது நீதிபதிகள், 'நீதிபதிகளின் மனநிலையை வக்கீல்களும், வக்கீல்களின் மன நிலையை நீதிபதிகளும் அறிவார்கள்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு தான் விரைவில் ஓய்வுபெறுவது குறித்து தெரிந்தபிறகும் மனுக்களை விசாரித்தால் வானம் ஒன்றும் இடிந்துவிடாது. ஒன்றும் நிகழ்ந்துவிட போவதில்லை. தனிநபரோ, குழுவாகவோ நீதித்துறையை தாக்குவதை அனுமதிக்க முடியாது' என கருத்து தெரிவித்தனர்.

மேலும், நிலுவையில் உள்ள மனுக்களை சென்னை ஐகோர்ட்டு விசாரிக்க வேண்டும். இதன்படி, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை முடித்து வைக்கிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்