கேரளா: நடிகையை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மலையாள நடிகர் விஜய் பாபு கைது!

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் விஜய் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2022-06-27 11:36 GMT

கொச்சி,

பாலியல் வன்கொடுமை வழக்கில் மலையாள நடிகர் விஜய் பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்தவர் விஜய் பாபு. சமீபத்தில் இவர் தயாரித்த படத்தில் நடித்திருந்த நடிகை ஒருவர், இவர் மீது பாலியல் புகார் கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் அந்த நடிகை பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் கேரள ஐகோர்ட்டு உத்தரவுப்படி எர்ணாகுளம் டவுன் தெற்கு காவல் நிலையத்தில் காலை 9.00 மணிக்கு விசாரணை அதிகாரிகள் முன்பு விஜய் பாபு ஆஜரானார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.

படத்தில் நடிக்க சான்ஸ் தருவதாக கூறி மயக்க மருந்து கொடுத்து தன்னை பலமுறை பலாத்காரம் செய்த புகாரின் பேரில் நடிகர் விஜய் பாபுவை கேரள போலீசார் கைது செய்தனர்.

கேரள ஐகோர்ட்டில் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், அவர் விரைவில் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை விடுவிப்பதற்கு முன், குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் இருந்து போலீசார் ஆதாரங்களை சேகரிப்பார்கள்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஜூன் 27 (திங்கள்கிழமை) தொடங்கி ஜூலை 3-ஆம் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை விஜய் பாபுவை விசாரிக்க, விசாரணைக் குழுவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

ஆனால் அவர் சமூக ஊடகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் அவர் எந்த விதமான தாக்குதலிலும் ஈடுபடக்கூடாது. கோர்ட்டின் அனுமதியின்றி அவர் கேரளாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதற்கிடையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (அம்மா) நேற்று கூறுகையில், நடிகர்-தயாரிப்பாளர் விஜய் பாபு மீது எந்தவொரு நடவடிக்கையும் கோர்ட்டு தீர்ப்பின்படி எடுக்கப்படும் என்று கூறியது.

Tags:    

மேலும் செய்திகள்