மராட்டியத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் மரணம் தற்கொலை அல்ல; விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

இவர்கள் 2 பேரும் உணவில் சில நச்சுப் பொருட்களைக் கலந்தது தெரியவந்தது.

Update: 2022-06-27 14:31 GMT

புனே,

மராட்டிய மாநிலம் புனேவில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாங்லி மாவட்டத்தில் அமைந்துள்ளது மஹைசல் கிராமம்.

கடந்த 20ம் தேதி, மஹைசல் கிராமத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகளவு கடன் வாங்கி, அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை என்றும், கடன் தொல்லை காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்தனர்.

அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு வீட்டில் 6 சடலங்களும், மற்றொரு வீட்டில் 3 சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தினருக்கு கடன் கொடுத்தவர்களில் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக 13 பேரை போலீசார் கைது செய்தர். மீதமுள்ளவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இந்த நிலையில், இன்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக, அவர்களிடம் நடத்திய விசாரணையில், இவர்கள் 2 பேரும் உணவில் சில நச்சுப் பொருட்களைக் கலந்தது தெரியவந்தது. எனவே இது தற்கொலை அல்ல, கொலை வழக்கு என்று மாவட்ட எஸ்.பி. தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்