மராட்டியத்தில் ரூ. 1,100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்- சினிமா பாணியில் நடந்த சம்பவம்

ரசாயன தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரூ.1,100 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-02-20 12:10 GMT

கோப்பு படம்

 மும்பை,

மராட்டிய மாநிலம் புனே நகரின் எல்லை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது அங்கு வந்த ஒரு வாகனத்தில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினர். தீவிர விசாரணையின்போது அவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என்று தெரியவந்தது.

இதையடுத்து அவர்களின் வாகனம் மற்றும் தங்கியிருந்த இடத்தில் சோதனை நடத்தப்பட்டது. இதில், அங்கு பதுக்கி வைத்திருந்த 55 கிலோ மெபட்ரோன் என்ற போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ.100 கோடி ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனத்தில் இருந்த 3 பேரை கைது செய்தனர். புனே மாவட்டம் குர்கும் எம்.ஐ.டி.சி தொழிற்பேட்டையில் இருந்து அவர்கள் இந்த போதைப்பொருளை கடத்தி வந்ததாக தெரிவித்தனர். இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் ரசாயன தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அங்கு தயாரிக்கப்பட்டு இருந்த 550 கிலோ எடையுள்ள மெபட்ரோன் என்ற போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மொத்தம் 600 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1,100 கோடி ஆகும். இதையடுத்து போலீசார் தொழிற்சாலையை இழுத்து மூடினர்.

பின்னர் உரிமையாளர் அனில் சேபிள் என்பவரை கைது செய்தனர். புனே பகுதியில் அதிக போதைப்பொருள் பிடிபட்டு இருப்பது இதுதான் முதல் முறை என்று புனே மாநகர போலீஸ் கமிஷனர் அமிதேஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்