மராட்டிய அரசியல் குழப்பத்துக்கு பா.ஜனதா காரணம் அல்ல - துணை முதல்-மந்திரி அஜித்பவார்
மராட்டியத்தில் நடைபெறும் அரசியல் குழப்பத்துக்கு பா.ஜனதா தான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டினார்.
மும்பை,
மராட்டியத்தில் நடைபெறும் அரசியல் குழப்பத்துக்கு பா.ஜனதா தான் காரணம் என்று தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் குற்றம்சாட்டினார். அதேவேளையில் அந்த கட்சியை சேர்ந்த துணை முதல்-மந்திரி அஜித்பவார் நிருபர்களிடம் கூறுகையில், "இதில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாக தனக்கு தெரியவில்லை. இதுவரை, பா.ஜனதாவின் முன்னணி தலைவர்கள் யாரும் தலையிடவில்லை" என்றார்.
மேலும் அவர், சிவசேனாவில் நிலவுவது உள்கட்சி பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காண்பார்கள் என்று நம்புகிறேன். உத்தவ் தாக்கரேக்கு எங்களது ஆதரவு தொடரும்" என்றார்.