ஊழல் வழக்கில் கைதான மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன்: மும்பை ஐகோர்ட்டு உத்தரவு!

மராட்டிய மாநில முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2022-10-04 11:17 GMT

மும்பை,

முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.

மராட்டிய முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை, சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அனில்தேஷ்முக் வழக்கு தொடர்பாக நவம்பர் 2021இல் கைது செய்யப்பட்டு தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்தநிலையில் அனில்தேஷ்முக் மற்றும் அவருடன் வழக்கில் தொடர்புடைய நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே, தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே ஆகியோரும் ஜாமீன் கேட்டு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், மும்பை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது முன்னாள் உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜேஜே ஜமாதார் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்