மராட்டியத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியது
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மும்பை,
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மராட்டியத்திலும் தொற்று பாதிப்பு கிடு கிடுவென உயரத்தொடங்கியுள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேர கொரோனா பாதிப்பு 4,024- ஆக உயர்ந்துள்ளது. நேற்றை விட இது 36 சதவிகிதம் அதிகம் ஆகும்.
மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 79 லட்சத்து 15 ஆயிரத்து 418- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 2 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,47,875- ஆக உயர்ந்துள்ளது. பி.ஏ.5 வகை கொரோனா பாதிப்பு 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாகவும் மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தலைநகர் மும்பையில் மட்டும் 2,293- பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 23 ஆம் தேதிக்குப் பிறகு மும்பையில் ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுவேயாகும். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 3,028- பேர் குணம் அடைந்துள்ளனர்.