மனைவியை கத்தியால் குத்திவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நபர்

மனைவியை கத்தியால் குத்திவிட்டு 50 வயதான நபர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-07 19:32 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் பஞ்சவாதி பகுதியை சேர்ந்தவர் ராஜு ரத்தன்சிங் தாக்கூர் (வயது 50). இவர் தனது மனைவியுடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ராஜூவுக்கும் அவரது மனைவிக்கும் இடையே நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ராஜூ தனது மனைவியை கத்தியால் குத்தியுள்ளார். இதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர், ராஜூ அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து, ராஜூவின் வீட்டிற்குள் சென்று பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ராஜூவின் மனைவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதேவேளை, மாடியில் இருந்து கீழே தற்கொலை செய்துகொண்ட ராஜூவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்