மத்திய பிரதேசம்: முதல்-மந்திரி அருகே அமர்ந்து விருந்து சாப்பிட்ட நபர் சிறை கைதி என தகவல்

மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி அருகே அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்ட நபர் ஜாமீனில் வெளி வந்த சிறை கைதி என தெரிய வந்து உள்ளது.

Update: 2023-04-17 11:14 GMT

போபால்,

மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் சித்தி மாவட்டத்தில் உள்ள கோத்ரா கிராமத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு உள்ளூர்வாசிகளுடன் ஒன்றாக தரையில் அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டு உள்ளார்.

அப்போது, கிராமவாசிகளுடன் அவருக்கு மிக நெருக்கத்தில் அரவிந்த் குப்தா என்பவரும் ஒன்றாக அமர்ந்து மதிய விருந்து சாப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் வெளிவந்து வைரலானது.

இந்த நிலையில், அந்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்த மரக்கட்டைகளை திருடியதற்காக வன துறையால் கடந்த 7-ந்தேதி கைது செய்யப்பட்டவர் என தெரிய வந்து உள்ளது.

சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு சில நாட்களுக்கு முன் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதன்பின்பு அவர் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் பற்றி தெரிய வந்ததும் அரசு அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் இதுபற்றி எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்