கரும்பு தோட்டத்தில் கிடந்த 3 சிறுத்தை குட்டிகள் மீட்பு

கரும்பு தோட்டத்தில் கிடந்த 3 சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டது.

Update: 2022-08-18 21:13 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் மோடசக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சேத்தன். விவசாயி. இவர் தனது தோட்டத்தில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அறுவடையான கரும்புகளை தொழிலாளர்கள் வெட்டி வந்தனர்.

இந்த நிலையில் நேற்றும் கரும்பு வெட்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அந்த சமயத்தில் கரும்பு தோட்டத்தில் 3 சிறுத்தை குட்டிகள் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதை பார்த்த தொழிலாளர்கள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனத்துறையினர் விரைந்து வந்து, 3 சிறுத்தை குட்டிகளையும் மீட்டனர். கரும்பு தோட்டத்திலேயே சிறுத்தை குட்டிகளை ஈன்றிருக்கலாம் என்றும், இரைதேடி சிறுத்தை சென்றிருக்கலாம் என்றும் வனத்துறையினர் கருதுகிறார்கள். இதனால் தாய் சிறுத்தையுடன் குட்டிகளை சேர்க்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்