புல்லட் ரெயில் தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்கு முன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: ரெயில்வே மந்திரி

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன.

Update: 2022-11-05 14:07 GMT

புதுடெல்லி,

புல்லட் ரெயில் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

இன்று செய்தியாளர்களிடம் ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது, "புல்லட் ரெயில்களை நாட்டிற்கு கொண்டு வருவதில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் புதிய திட்டத்தைத் தொடங்கும்போது நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.ஒவ்வொருவரும் அந்த அமைப்பை உள்வாங்கி அதிலிருந்து கற்றுக்கொள்கிறார்கள்.

நாட்டிலேயே முதல் முறையாக கொண்டு வரப்பட உள்ள புல்லட் ரெயில் திட்டத்தில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டால், பிற இடங்களில் புதிய புல்லட் ரெயில் வழித்தடங்கள் அமைப்பது குறித்து அறிவிக்கப்படும்" என்றார்.

மும்பை-அகமதாபாத் அதிவேக புல்லட் ரெயில் திட்டத்திற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக நாட்டிலேயே முதல் முறையாக தானே க்ரீக் பகுதியில், கடலுக்கு அடியில் 7 கிமீ நீள சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது என்று தேசிய அதிவேக ரெயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்