ஒரே நாளில் 7.65 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: 6 ஆண்டு சாதனையை முறியடித்த லோக் அதாலத்

ஒரே நாளில் 7.65 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு கண்டு கர்நாடக லோக் அதாலத் 6 ஆண்டு சாதனையை முறியடித்தது

Update: 2022-06-28 16:50 GMT

பெங்களூரு: கர்நாடக மாநில சட்ட சேவை ஆணையம் சார்பில் கடந்த 25-ந் தேதி மாநிலம் முழுவதும் லோக் அதாலத் நடத்தப்பட்டன. இதுகுறித்து கர்நாடக மாநில சட்ட சேவை ஆணைய தலைவரும், ஐகோர்ட்டு நீதிபதியுமான வீரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மாநிலம் முழுவதும் கடந்த 25-ந் தேதி நடந்த லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 7 லட்சத்து 65 ஆயிரத்து 77 வழக்குகளுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இது புதிய சாதனையாகும். கடந்த 2016-ம் ஆண்டு ஒரே நாளில் 6 லட்சத்து 16 ஆயிரத்து 715 வழக்குகளுக்கு லோக் அதாலத் மூலம் தீர்வு காணப்பட்டது தான் சாதனையாக இருந்தது. அது தற்போது முறியடிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்