'ராஜஸ்தானில் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் கடன் உதவிகள் வழங்கப்படும்' - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
ஜெய்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், ராஜஸ்தானில் 2,363 விவசாயிகளுக்கு மத்திய அரசின் திட்டத்தின்கீழ் 3 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் 9 ஆயிரம் விவசாயிகளுக்கு பணமாகவோ அல்லது டிராக்டர் உள்ளிட்ட விவசாய உபகரணங்கள் வாங்குவதற்காகவோ கடன் உதவிகள் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதே போல் முத்ரா திட்டத்தின்கீழ் 3,700 பேருக்கு 40 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளும், தொழில் முனைவோர் 20 பேருக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் உதவியும் வழங்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.