ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் தீர்ப்பை ஏற்போம்- முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கும் தீர்ப்பை ஏற்போம் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோா்ட்டு வழங்கியுள்ள மாறுபட்ட தீர்ப்பு குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பல்லாரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஹிஜாப் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளதாக தகவல் அறிந்தேன். இதுகுறித்து மேலும் கருத்துக்கூற தீர்ப்பின் முழு விவரங்களையும் படிக்க வேண்டும். அதற்கு முன்னதாக கருத்து கூறுவது சரியாக இருக்காது. சுப்ரீம் கோர்ட்டு எந்த தீர்ப்பு வழங்கினாலும் அதை அரசு ஏற்றுக்கொள்ளும். இந்த விஷயத்தில் தீர்ப்புக்கு ஆதரவு-எதிர்ப்பு என்ற நிலை இல்லை. மாணவர்களின் நலன் கருதி கர்நாடக அரசு எடுத்த முடிவை ஐகோர்ட்டு ஏற்றுக்கொண்டது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.