இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி மனு தாக்கல்: அபராதம் விதிக்க நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை
இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய கோரி சட்டக்கல்லூரி மாணவி மனு தாக்கல் செய்தார். விசாரிக்க மறுத்த நீதிபதிகள் மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.
புதுடெல்லி,
இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் சட்டக்கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
நாட்டில் சாதி வாரியாக இடஒதுக்கீடு என்பது அமலில் இருந்து வருகிறது. இதனை ரத்து செய்யக்கோரி இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஷிவானி பன்வர் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இடஒதுக்கீடு முறை என்பது சாதிய பாகுபாடுகளை வளர்க்கிறது என்பது போலவும் அதில் குறிப்பிட்டு இருந்த்தார். இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சந்திரசூட் தலைமையில் விசாரணைக்கு வந்தது.
அதனை விசாரித்த நீதிபதிகள், இது எந்த மாதிரியான மனு? இதில் என்ன குறிப்பிடுகிறீர்கள்.? என கடிந்து கொண்டதுடன் இந்த மனுவை திரும்ப பெறாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்து விசாரணையை முடித்து வைத்தனர்.