தண்டவாளத்தில் மண் சரிவு; மங்களூரு-சுப்ரமணியா ரெயில் சேவை பாதிப்பு

தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவினால் மங்களூரு-சுப்ரமணியா ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-30 15:54 GMT

மங்களூரு;

தட்சிண கன்னடா மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக மங்களூரு-சுப்ரமணியா செல்லும் ரெயில் தண்டவாள பாதையில் படீல் என்ற பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக மங்களூரு-சுப்ரமணியா ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ரெயில்வே ஊழியர்கள் படீல் பகுதிக்கு சென்று தண்டவாளத்தில் சரிந்து விழுந்த மண்சரிவை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி சுமார் 5 மணி நேரம் கழித்து மண் முற்றிலுமாக அகற்றப்பட்டது.

இதைதொடர்ந்து அந்த தண்டவாளத்தில் ரெயில் இயக்கப்பட்டதாக ரெயில்வே அதிகாரி கோபிநாத் என்பவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்