டிரைவர் சீட்டில் இருந்து வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண் கண்டக்டர் சஸ்பெண்ட்
அரசு பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வரும் பெண், டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மும்பை,
மராட்டிய மாநிலம் உஸ்மனாபாத் மாவட்டம் கலாம்ப் பகுதியில் இயங்கும் அரசு பஸ்சில் பெண் கண்டக்டராக பணியாற்றி வருபவர் சாஹர் மங்கல் கொவர்தன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அரசு பஸ்சில் டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளார்.
அதனை சாஹர் மங்கல் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசு பஸ் பெண் கண்டக்டரான சாஹர் விதிகளை மீறி டிரைவர் சீட்டில் இருந்தவாறு வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் பதிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனை தொடர்ந்து, சாஹரை கண்டக்டர் பணியில் இருந்து நீக்கிய மராட்டிய போக்குவரத்து துறை இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படியும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.