எரிபொருள், உணவு பற்றாக்குறை: இலங்கை செல்வோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இலங்கைக்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
புதுடெல்லி,
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் எரிபொருள், உணவு பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. எனவே அங்கு செல்ல விரும்பும் இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதாவது, இலங்கைக்கு அத்தியாவசிய பயணம் செய்ய விரும்புவோர், அங்கு பணம் மாற்றும் வசதி, எரிபொருள் கிடைக்கும் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் உறுதி செய்துவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளதாக மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளார்.