மும்பை: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விபத்து - பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இன்னும் பத்து குடியிருப்பாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.

Update: 2022-06-28 14:30 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் குர்லா நகரில் 4 அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் பல குடும்பங்கள் வசித்து வந்தன.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடம் நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. இதனால், அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் குடியிருந்த 10-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் நடைபெற்ற மீட்புப்பணியில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பலர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஆனாலும், இந்த கட்டிட விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது. இன்னும் பத்து குடியிருப்பாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பார்கள் என்று அஞ்சப்படுகிறது.


இதனிடையே, மும்பை குர்லாவில் கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் இடிபாடுகளில் இருந்து இரண்டு புறாக்கள் உயிருடன் மீட்கப்பட்டன.

அடுக்குமாடி மிகவும் மோசமான, பாழடைந்த நிலையில் இருந்தே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த கட்டிட விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்