பா.ஜனதாவுடன் கூட்டணியை இறுதி செய்ய குமாரசாமி இன்று டெல்லி பயணம்

பா.ஜனதாவுடன் கூட்டணியை இறுதி செய்ய குமாசாமி இன்று (வியாழக்கிழமை) டெல்லி சென்று பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.

Update: 2023-09-20 18:45 GMT

பெங்களூரு:-

பா.ஜனதா- ஜனதா தளம் (எஸ்) கூட்டணி

இந்திய நாடாளுமன்றத்திற்கு அடுத்த ஆண்டு (2024) மே மாதத்தற்குள் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளன.

இது தொடர்பாக பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவேகவுடா சந்தித்து பேசியுள்ளார். இந்த தகவலை தேவேகவுடாவே கூறினார்.

இன்று டெல்லி செல்கிறார்

ஆனால் தொகுதிகள் ஒதுக்கீடு குறித்து முடிவாகவில்லை என்று இரு கட்சிகளின் தலைவர்களும் கூறினர். இந்த நிலையில் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) மூத்த தலைவருமான குமாரசாமி இன்று (வியாழக்

கிழமை) டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷாவை நேரில் சந்தித்து கூட்டணி குறித்து பேச உள்ளதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு

இந்த பேச்சுவார்த்தையின்போது கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் பங்கீடு குறித்தும் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனதா தளம் (எஸ்) கட்சி 5 தொகுதிகளை கேட்பதாகவும், ஆனால் பா.ஜனதா 4 தொகுதிகளை வழங்க முன்வந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்