கொள்ளேகால் தாசில்தாருக்கு மீண்டும் ரூ.15 ஆயிரம் அபராதம்
மற்றொரு வழக்கில் கொள்ளேகால் தாசில்தாருக்கு மீண்டும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து மாநில தகவல் அறியும் உரிமை சட்ட ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கொள்ளேகால்:-
ரூ.15 ஆயிரம் அபராதம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா தாசில்தாராக இருப்பவர் மஞ்சுளா. இந்த நிலையில் கொள்ளேகாலை சேர்ந்த சிவமூர்த்தி நாயக்கா என்பவருக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சரியான தகவலை அளிக்கவில்லை என தெரிகிறது. இதனால், சிவமூர்த்தி நாயக்கா பெங்களூருவில் உள்ள மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து மாநில தகவல் அறியும் உரிமை ஆணையம், தாசில்தார் மஞ்சுளாவுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் மற்றொரு வழக்கிலும் தகவல் அறியும் உரிமை ஆணையம் தாசில்தார் மஞ்சுளாவுக்கு மீண்டும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
சம்பளத்தில் பிடித்தம்
அதாவது, கொள்ளேகால் தாலுகா கங்ஹள்ளி கிராமத்தை சேர்ந்த லிங்கராஜ் என்பவர், 2 ஏக்கர் நிலம் பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டுள்ளார். ஆனால் தாசில்தார் மஞ்சுளா சரியான தகவல் அளிக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து லிங்கராஜ், மாநில தகவல் அறியும் உரிமை சட்டத்தில் புகார் அளித்தார். இதனை விசாரித்த தகவல் அறியும் உரிமை ஆணையம், தாசில்தார் மஞ்சுளாவுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தது. மேலும் அந்த தொகையை தாசில்தாரின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என்று சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளது.