வருகிற 26-ந் தேதி கொடவா தினம் கொண்டாட்டம்
குடகு மாவட்டத்தில் வருகிற 26-ந்தேதி கொடவா தினம் கொண்டாடப்பட உள்ளது.
குடகு:-
கொடவா தினம்
குடகு மாவட்டம் மடிகேரி தாலுகாவில் உள்ள தனியார் விருந்தினர் மாளிகையில் ஆண்டுதோறும் கொடவா மக்களுக்கான ஆண்டு விழா நடைபெறும். இந்த விழாவில் கொடவா இனத்தை சேர்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்வார்கள். அதன்படி கடந்த 35 ஆண்டுகளாக கொடவா மக்களின் ஆண்டு விழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கொடவா மக்களின் ஆண்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கு முன்னதாக
ஒவ்வொரு ஆண்டு நடைபெறுவது போன்று கொடவா மக்களின் உரிமைக்காக போராடி உயிர் தியாகம் செய்த முன்னோரை நினைவு கூறும் வகையில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதாவது இந்த நாளில் இறந்த முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்வதுடன், அவர்களுக்காக சிறப்பு வழிபாடு நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான வழிபாடு நேற்று மடிகேரியில் உள்ள தேவட்டு பறம்பு பகுதியில் நடந்தது. இதில் கொடவா இன மக்கள் தங்கள் பாரம்பரிய உடைகள் அணி, வாத்தியங்களை முழங்கி முன்னோர்களை நினைவு கூர்ந்தனர்.
36-வது ஆண்டு விழா
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய கொடவா சமுதாயத்தை சேர்ந்த தலைவர் என்.யு.நாச்சப்பா என்பவர் கூறும்போது:- வருகிற 26-ந்தேதி 36-வது கொடவா ஆண்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி சுப்பிரமணியசாமி, சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
இதில் அனைத்து கொடவா மக்களும் கலந்து கொள்ளவேண்டும். இந்த விழாவில் ஆண்டுதோறும் நாம் வைக்கும் கோரிக்கைகளுடன் புதிய தேவைகள் அரசு முன்பு வைக்க இருக்கிறோம். குறிப்பாக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் கொடவா மக்களை சேர்க்கவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் கொடவா மக்களுக்கு உயிர் தியாகம் செய்தவர்களுக்கு தேவட்டுபறம்பில் சர்வதேச நினைவிடம் கட்டவேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.