கேரளாவில் ஒரே நாளில் 765 பேருக்கு கொரோனா உறுதி: அரசு எச்சரிக்கை !

எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

Update: 2023-03-31 00:38 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 765 புதிய கொரோனா தொற்று பதிவாகியுள்ளதாக கேரள சுகாதாரத்துறை மந்திரி வீனா ஜார்ஜ் தெரிவித்தார்.

சுகாதார மந்திரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, எர்ணாகுளம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கும் கொரோனா பரவல் குறித்து சுகாதார மந்திரி கூறுகையில், "மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வருகின்றன, எனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஓமிக்ரான் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மரபணு வரிசைமுறைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. என்றார்.

மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ஒரு மாதத்தில் 20 கொரோனா இறப்புகள் நடந்துள்ளன. அவர்களில் பெரும்பாலோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். ஐசியூவில் உள்ள பெரும்பாலான நோயாளிகளும் வயதானவர்கள். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். என்று அவர் கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்