பல் துலக்காமல் முத்தம் கொடுத்ததால் விபரீதம்... மனைவியை குத்திக்கொன்ற கணவன்

பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்தி கொலை செய்து உள்ளார்.

Update: 2022-06-29 08:02 GMT


Full View

சென்னை

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ் இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு ஒன்றைரை வயதில் குழந்தை உள்ளது. காலை எழுந்ததும் அவினாஷ் குழந்தைதியை கொஞ்சுவது வழக்கம். இன்றும் அதுபோல் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சி உள்ளார்.

இதை பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு ஏன் முத்தம் கொடுத்தீர்கள் என கேட்டு உள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் கோபம் அடைந்த அவினாஷ் மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். இதில் பலத்த படுகாயம் அடைந்த தீபிகா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவினாசை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்