கேரளா: பாலியல் துன்புறுத்தலில் கல்லூரி மாணவி தற்கொலை; தாத்தா கைது
கேரளாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோழிக்கோடு,
கேரளாவின் கோழிக்கோட்டில் கல்லூரி மாணவி ஒருவர் சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில், தற்கொலை குறிப்பு ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அந்த குறிப்பில் மாணவி, தனது தாயாரின் தந்தையான தாத்தாவை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார் என தெரிவித்து உள்ளார்.
தொடக்க கட்ட விசாரணையின்படி, 7-ம் வகுப்பில் இருந்தே மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறார் என தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மாணவியின் 62 வயது தாத்தாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் தற்கொலை குறிப்பை முதலில் மறைத்து வைத்துள்ளார். எனினும், போலீசார் பின்னர் அதனை கைப்பற்றி உள்ளனர். நடந்த சம்பவம் பற்றி முதியவர் போலீசில் ஒப்பு கொண்டுள்ளார். இதன்பின்பு, அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.