ஒருவர் மடியில் ஒருவர்...! கேரளாவில் மாணவ மாணவிகள் நூதன போராட்டம்

'கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்திய கேரள மாணவர்கள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து நூதன போராட்டம்

Update: 2022-07-22 05:54 GMT

திருவனந்தபுரம்

கேரள மாணவர்கள் எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பார்கள். ஒவ்வொரு முறையும் கட்டுப்பாடுகள் என்ற பெயரில் அழுத்தங்கள் வரும்போது, ​​புதுமையான எதிர்ப்புகளால் நாட்டின்ன் கவனத்தை ஈர்க்கிறார்கள். 'கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் பரபரப்பை ஏற்படுத்திய கேரள மாணவர்கள், தற்போது போலீசாருக்கு எதிராக சமீபத்தில் நூதன் போராட்டத்தை தொடங்கு அதுகுறைத்த புகைபடத்தை வெளியிட்டு உள்ளனர்.

திருவனந்தபுரத்தின் சிஇடி (கல்லூரி ஆஃப் இன்ஜினியரிங் திருவனந்தபுரம்) மாணவ-மாணவிகள் தங்கள் கல்லூரிக்கு அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் அமர்ந்து அரட்டை அடிப்பது வழக்கம் . ஆனால், கடந்த செவ்வாய்கிழமை அவர்கள் அங்கு சென்றபோது இரும்பு பெஞ்சை யாரோ துண்டு துண்டாக வெட்டி மூன்று நாற்காலிகளாக ஏற்பாடு செய்திருந்தனர். இதனால் இருவர் அருகருகே உட்கார முடியாது . ஒருவர் மட்டுமே இருக்கையில் அமரும்படி வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இதனால் சிஇடி கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவிகள் ஒருவர் மடியில் ஒருவர் அமர்ந்து இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.மாணவ மாணவிகள் அருகருகே உட்காரக்கூடாது என்ற நோக்கத்தில் சிலர் இப்படி செய்ததாக மாணவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் கேரளாவில் 280 பெண்கள் பள்ளிகளும், 164 ஆண்கள் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளை ஒழித்துவிட்டு அப்பள்ளிகளை கலப்பு பள்ளிகளாக மாற்றி இணைக்கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று கேரள கல்வித்துறைக்கு குழந்தை உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்