காஷ்மீர்: வீடு புகுந்து டி.வி. நாடக நடிகை சுட்டுக்கொலை - பயங்கரவாதிகள் அட்டுழியம்

காஷ்மீரில் பிரபல டி.வி. நாடக நடிகையை பயங்கரவாதிகள் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.

Update: 2022-05-25 16:24 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

இதற்கிடையில், காஷ்மீரில் டி.வி. நாடகங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை அம்பிரீம். இவர் வீடு காஷ்மீரின் பட்கம் மாவட்டம் ஹிஷோரோ பகுதியில் உள்ளது.

இந்நிலையில், நடிகை அம்பிரீமின் வீட்டிற்குள் இன்று இரவு 9 மணியளவில் நுழந்த பயங்கரவாதிகள் அம்பிரீமின் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அம்பிரீமீனுடனிருந்த 10 வயது சிறுமி மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நடிகை அம்பிரீமின், 10 வயது சிறுமியும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்பிரீமின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கிக்குண்டு காயத்தால் படுகாயமடைந்த 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தீவிரமாக தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்