சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக மும்பை சிறுமிக்கு மிரட்டல் விடுத்த காஷ்மீரைச் சேர்ந்த நபர் கைது..!

கன்னையா லால் கொலை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட மும்பை சிறுமிக்கு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.

Update: 2022-07-11 19:16 GMT

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கடந்த ஜூன் 28 அன்று நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் கன்னையா லால் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கன்னையா லால் கொலை செய்யப்பட்டது குறித்து தனது கருத்தை கூறி வீடியோ வெளியிட்ட மும்பையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு கொலை மற்றும் பாலியல் மிரட்டல் விடுத்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயாஸ் அகமது பட் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஜூலை 1 அன்று சிறுமிக்கு மூன்று எண்களில் இருந்து கொலை மற்றும் பாலியல் அச்சுறுத்தல் அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் வந்துள்ளன. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், மறுநாள் போலீசில் புகார் அளித்தனர்.

இதையடுத்து பயாஸ் அகமது பட்டை ஜம்மு காஷ்மீர் போலீசாரின் உதவியுடன் பட்காமிலிருந்து மும்பை போலீசார் நேற்று கைது செய்தனர். தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்