கர்நாடகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

Update: 2022-07-11 23:49 GMT

பெங்களூரு,

பெங்களூருவில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.குறிப்பாக கடலோர மாவட்டங்கள், தென் கர்நாடகத்தின் உள்மாவட்டங்கள், வட கர்நாடகத்தி உள் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடகத்தில் 24 மணி நேரத்தில் அதாவது இன்று (செவ்வாய்க்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் மலைநாடு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். சிக்கமகளூரு, குடகு, சிவமொக்கா உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும். பெலகாவி, தார்வார், ஹாவேரி மற்றும் வட கர்நாடகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பெங்களூரு நகரை பொறுத்தவரையில் மேக மூட்டமாக காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.

இவ்வாறு அந்த மையம் கூறியுள்ளது.

இந்த கனமழை அடுத்த 5 நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வும் மையம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்