கர்நாடகத்தில் இன்று முதல் 2 நாட்கள் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்

கர்நாடகத்தில் இன்று முதல் 2 நாட்கள் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-10-09 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் இன்று(திங்கட்கிழமை) முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய 3 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென் கர்நாடகத்தின் உள்மாவட்டங்களான மண்டியா, மைசூரு, துமகூரு, சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் இன்று முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும். பெங்களூருவுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பாகல்கோட்டை, கலபுரகி, விஜயாப்புரா, கொப்பல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்